» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!

சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கிறிஸ்தவப் பெருமக்களுக்குத் தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: "உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மனித குலத்தின் பாவங்களைப் போக்கத் தம்மை அர்ப்பணித்து, சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமே ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

தியாகம், அன்பு, மன்னிப்பு மற்றும் புதிய யுகத்தின் நம்பிக்கை ஆகிய உயரிய பண்புகளை மனித குலத்திற்கு உணர்த்தும் இந்த புனித நாள், அனைவருக்கும் புதிய வாழ்வையும் நம்பிக்கையையும் அளிக்கிறது "இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது இருள் நீங்கி ஒளி வெல்லும் என்பதற்கான நிரந்தர சின்னமாகும். மனிதர்களிடையே அன்பு, சகிப்புத்தன்மை, மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை இந்தத் திருநாள் நமக்கு நினைவூட்டுகிறது.

இன்றைய உலகில் நிலவும் சவால்கள், வேற்றுமைகள் மற்றும் துன்பங்களைக் கடந்து, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் நிலைபெற வேண்டிய தருணமாக இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்துள்ளது. அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் கருணையும் காட்டி, நல்லிணக்கத்துடன் வாழ்வதே இயேசுவின் போதனைகளின் சாராம்சமாகும்."

"இந்த மகத்தான ஈஸ்டர் திருநாளில், மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, வளம் மற்றும் நலம் பெருகிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்!" இவ்வாறு அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory