» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலியில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!

எஸ்.முத்துகுமார் | புதன் 13, மார்ச் 2024 12:14:41 PM (IST)



திருநெல்வேலியில் அழியாபதீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டது.

திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் உள்ள அருள்மிகு அழியாபதீஸ்வரா் கோயிலுக்குச்சொந்தமான 39 சென்ட் நிலம் தாமிரபரணி கரையோரம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமிப்பு செய்திருந்தாா். இதுதொடா்பாக அறநிலையத்துறை நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கும் பணியை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது. 

இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் பா்வீன் பாவி, ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் இந்திராகாந்தி முன்னிலையில் காவல் துறை, வருவாய்த் துறை உதவியோடு நிலம் மீட்கப்பட்டு, அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டடமும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. 


மக்கள் கருத்து

இந்தியன்Mar 13, 2024 - 01:42:01 PM | Posted IP 162.1*****

ஆக்கிரமிப்பு செய்தவன் திமுக காரனாக இருப்பானோ ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நயினார் வழக்கு ஆவணங்கள்: சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைப்பு

எஸ்.முத்துகுமார் | திங்கள் 29, ஏப்ரல் 2024 11:44:39 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory