» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல் ஜோடியை படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு : போலி வனத்துறை அதிகாரி கைது

திங்கள் 29, ஏப்ரல் 2024 9:06:32 AM (IST)

ஆலங்குளம் அருகே காதல் ஜோடியை செல்போனில் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த போலி வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மலைப்பகுதியில் ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 25-ந் தேதி வந்த காதல் ஜோடி ஒன்று அங்குமிங்குமாக சுற்றித் திரிந்தது. அப்போது அங்கு வந்த 2 பேர் தங்களது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்தனர். பின்னர் நாங்கள் வனத்துறை அதிகாரிகள் என மிரட்டி, காதல் ஜோடியிடம் ரூ.500 பறித்தனர்.

மேலும் உங்களது பெற்றோருக்கு இந்த புகைப்படங்களை அனுப்பி விடுவோம் எனவும், நாங்கள் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டினர். அதற்கு அந்த காதல் ஜோடி, நாங்கள் ரூ.3 ஆயிரம் தருகிறோம். அந்த புகைப்படத்தை அழித்து விடும்படி கூறினர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு காதல் ஜோடி தகவல் தெரிவித்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கு நின்ற 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டர்.

மற்றொருவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் தங்கசாமி (34) என்பதும், தப்பி ஓடியவர் அவரது நண்பரான கீழப்பாவூரை சேர்ந்த பொனுச்சாமி மகன் ஜெகநாதன் என்பதும் தெரியவந்தது.மேலும் இவர்கள் 2 பேரும் கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஜெகநாதனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory