» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்றால் உரிமம் ரத்து - பொது மேலாளர் எச்சரிக்கை

வெள்ளி 9, பிப்ரவரி 2024 5:34:26 PM (IST)

ஆவின் பால் பொருட்களை கூடுதலான விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்தால் முகவர் உரிமம் இரத்து செய்யப்படும் என்று ஆவின் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக திருநெல்வேலி ஆவின் பொது மேலாளர் தியானேஷ் பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஆவின் முகவர்கள் மற்றும் ஆவின் பாலக ஒப்பந்ததாரர்களுக்கான அறிவிப்பு என்னவென்றால், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஏற்கனவே முகவர்களாக செயல்படுபவர்கள் தங்கள் முகவர் உரிமம் காலம் முடிவடைந்த பட்சத்தில் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 

அவ்வாறு உரிமம் புதுப்பிக்கப்படாவிட்டால் உரிமம் இரத்து செய்யப்பட்டு பால் வழங்குவது நிறுத்தம் செய்யப்படும். ஆவின் பாலகத்திற்கான உரிமம் இரத்து செய்யப்பட்டவர்கள் உடனடியாக பாலகத்தை மூடி, பாலகத்தை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆவின் பாலகத்திற்கான வாடகை, இட வாடகையை எந்தவித நிலுவையுமின்றி உடனடியாக அலுவலகத்தில் செலுத்த வேண்டும். 

அரசு துறைகளால் (மாநகராட்சி / நெடுஞ்சாலைத்துறை / வேளாண்துறை / உள்ளாட்சி அமைப்புகள்) நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட கூடுதலாக இடம் எதுவும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஆவின் பாலகத்தில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களைத் தவிர வேறு பொருட்கள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் பட்சத்தில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முகவர் உரிமம் இரத்து செய்யப்படும்.

ஆவின் பால் மற்றும் ஆவின் பால் உபபொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட (MRP) கூடுதலான விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் பட்சத்தில் முகவர் உரிமம் இரத்து செய்யப்படும். ஆவின் முகவர்கள், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இது குறித்து நிர்வாகத்திற்கு புகார்கள் எதுவும் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிமம் இரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory