» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி மாவட்டத்தில் வெற்றி பெற்ற நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள்
வெள்ளி 4, மார்ச் 2022 8:50:54 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றிற்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 440 கவுன்சிலர்கள் கடந்த 2ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அந்தந்த நகராட்சி, பேரூராட்சிகளின் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்ற தேர்தலில் முதலில் தலைவர் பதவிக்கும், பின்னர் துணைத் தலைவர் தேர்தலுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. போட்டி இருந்த இடங்களில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மற்ற இடங்களில் ஒருமனதாக தலைவர்கள், துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் 8 கவுன்சிலர்கள் வாக்களிக்க வேண்டும். இவர்களில் 4 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள்இ 4 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இரண்டு கட்சியினரும் சமபலத்தில் இருப்பதால் குற்றாலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க அதிமுகவைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள் வந்தனர். ஆனால் திமுகவைச் சேர்ந்த 4 கவுன்சிலர்கள் வரவில்லை. அவர்களுக்காக தேர்தல் நடத்தும் அலுவலர் 30 நிமிடங்கள் காத்திருந்தார். அதன்பின்னரும் திமுக கவுன்சிலர்கள் வராததால் போதிய கோரம் இல்லாததால் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளின் வெற்றி பெற்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் விபரம் வருமாறு:
தென்காசி – தலைவர் சாதிர் (திமுக), துணைத் தலைவர் கேஎன்எல் சுப்பையா (திமுக).
செங்கோட்டை – தலைவர் இராமலெட்சுமி (அதிமுக, பா.ஜக., ஆதரவு பெற்ற சுயேட்சை ), துணைத் தலைவர் நவதீதகிருஷ்ணன் (அதிமுக).
சுரண்டை- தலைவர் வள்ளி முருகன் (காங்கிரஸ்), துணைத் தலைவர் சங்கராதேவி (அதிமுக).
கடையநல்லூர் – தலைவர் ஹபிபூர் ரஹ்மான் (திமுக), துணைத் தலைவர் ராசையா (திமுக).
புளியங்குடி – தலைவர் விஜயா (திமுக), துணைத் தலைவர் அந்தோணிசாமி (திமுக),
சங்கரன்கோவில் – தலைவர் உமாமகேஸ்வரி (திமுக), துணைத் தiலைவர் கண்ணன் என்ற ராஜூ (அதிமுக).
தென்காசி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் குற்றாலம் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் மற்ற 16 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் விபரம் வருமாறு:
அச்சன்புதூர்- தலைவர் டாக்டர் சுசிகரன் (அதிமுக), துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம்- தலைவர் சுதா (திமுக), துணைத்தலைவர் ஜாண்ரவி (அதிமுக).
ஆழ்வார்குறிச்சி- தலைவர் சரசு (அதிமுக), துணைத் தலைவர் சங்கர் (அதிமுக).
ஆய்க்குடி- தலைவர் சுந்தர்ராஜன் (திமுக), துணைத் தலைவர் மாரியப்பன் (திமுக)
இலஞ்சி- தலைவர் சின்னத்தாய் (திமுக), துணைத் தலைவர் முத்தையா (திமுக).
கீழப்பாவூர்- தலைவர் ராஜன் (திமுக), துணைத் தலைவர் ராஜசேகர் (காங்கிரஸ்).
மேலகரம்- தலைவர் வேணி (திமுக), துணைத் தiலைவர் ஜீவானந்தம் (திமுக).
பண்பொழி- தலைவர் ராஜராஜன் (திமுக), துணைத் தலைவர் நாகலெட்சுமி (சுயேட்சை).
புதூர் (செ)- தலைவர் ரவிசங்கர் (திமுக), துணைத் தலைவர் ஹக்கீமாள் பானு (திமுக).
இராயகிரி- தலைவர் இந்திரா (சுயேட்சை), துணைத் தலைவர் குறிஞ்சி மகேஷ் (சுயேட்சை).
சாம்பவர்வடகரை- தலைவர் சீதாலெட்சுமி (திமுக), துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா (திமுக).
சிவகிரி- தலைவர் கோமதி சங்கரி (திமுக), துணைத் தலைவர் விக்னேஷ் (திமுக).
சுந்தரபாண்டியபுரம்- தலைவர் காளியம்மாள் (சுயேட்சை), துணைத் தலைவர் பண்டாரத்தேவர் (திமுக).
திருவேங்கடம்- தலைவர் சேர்மத்துரை (திமுக), துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.
வடகரை கீழ்பிடாகை- தலைவர் சேக்தாவூது (திமுக), துணைத்தலைவர் மாலதி (திமுக).
வாசுதேவநல்லூர்- தலைவர் லாவண்யா (சுயேட்சை), துணைத் தலைவர் லைலாபானு (திமுக).
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)

கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப் பின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
வெள்ளி 12, ஜூன் 2026 12:23:57 PM (IST)









