» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

8 வயது சிறுமி படுகொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

சனி 22, ஆகஸ்ட் 2026 8:13:30 PM (IST)

8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட கல்விளை பகுதியைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (26) என்பவரைச் சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், முத்தீஸ்வரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory