» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சரக்கு ரயிலில் தீவிபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:04:37 PM (IST)

தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் திடீரெனத் தீப்பிடித்துப் புகை வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் பான்பட் ரயில் நிலையத்திற்கு 25 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 03:25 மணிக்குச் சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயில் தட்டாப்பாறை ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, என்ஜினில் இருந்து 2-வது பெட்டியில் அடர்ந்த புகை வருவதை அங்குள்ள ரயில்வே கேட் கீப்பர் கவனித்தார்.
அவர் உடனடியாக வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க, அதிகாரிகள் ஓட்டுநருக்குச் செய்தி அனுப்பி ரயிலை மணியாச்சி ரயில்வே கேட் அருகே பாதுகாப்பாக நிறுத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த ஓட்டப்பிடாரம் தீயணைப்புப் படையினர், ரயில்வே கேட் வழியாக உள்ளே சென்று புகை வந்த நிலக்கரிப் பெட்டியின் மீது ஏறித் தண்ணீரைப் பீச்சியடித்தனர்.
சுமார் அரை மணி நேரம் போராடித் தீயை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தினர். பின்னர் அதிகாரிகள் அப்பெட்டியைச் சோதனை செய்ததைத் தொடர்ந்து ரயில் ராஜஸ்தானுக்குப் புறப்பட்டுச் சென்றது. அப்பகுதியில் இரட்டை ரயில் பாதை இருந்ததால், தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் எவ்விதத் தடங்கலுமின்றி இயங்கியது.
தீயணைப்புப் பணிகளுக்காக வாஞ்சி மணியாச்சி ரயில்வே கேட் சுமார் ஒரு மணி நேரம் பூட்டப்பட்டிருந்ததால், மணியாச்சியிலிருந்து ஒட்டநத்தம் செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விபத்தில் ஜிம் பயிற்சியாளர் பரிதாப பலி
சனி 22, ஆகஸ்ட் 2026 9:47:50 PM (IST)

8 வயது சிறுமி படுகொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:13:30 PM (IST)

கடைகளில் குழந்தைகள் வேலை செய்தால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:51:09 PM (IST)

தூய மரியன்னை கல்லூரியில் புத்தக விமர்சனம் - திறனாய்வுக் கலை சிறப்புப் பயிற்சி!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:25:12 PM (IST)

தூத்துக்குடியில் தெருநாய்கள் கணக்கெடுப்பு சிறப்புப் பயிற்சி முகாம்: ஆணையர் தொடங்கி வைத்தார்!
சனி 22, ஆகஸ்ட் 2026 4:49:37 PM (IST)

அரசு மகளிர் பள்ளியில் தேசிய விண்வெளி தின விழா விண்வெளிக் கண்காட்சி : மாணவிகள் அசத்தல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 4:37:38 PM (IST)









