» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறு: மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
சனி 25, ஜூலை 2026 11:00:28 AM (IST)
மாசார்பட்டி அருகே குடும்பத் தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டிற்குச் சென்றதால் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி அருகே தாப்பாத்தி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் ஜான்பாண்டி (38). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பனைமரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், அவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் எழுந்து நடக்க முடியாத நிலையில் முடங்கிப்போய் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவர்களது குடும்பச் சூழ்நிலை காரணமாக, ஜான்பாண்டியின் குழந்தைகளை அவரது மனைவியின் பெற்றோர் தங்களது பராமரிப்பில் வளர்த்து வந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை ஜான்பாண்டிக்கும் அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே குடும்பப் பிரச்சனை தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோபித்துக் கொண்ட சரண்யா பட்டிதேவன்பட்டி கிராமத்தில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த ஜான்பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த மாசார்பட்டி காவல்துறையினர், ஜான்பாண்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் செயற்கை கால் அளவீடு முகாம்
சனி 25, ஜூலை 2026 12:43:29 PM (IST)

தூத்துக்குடி தாலுகாவில் 9 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்: லஞ்ச ஒழிப்பு சோதனையால் அதிரடி!
சனி 25, ஜூலை 2026 11:06:48 AM (IST)

மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஜூலை 2026 10:51:20 AM (IST)

உப்பு நிறுவன கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி - தூத்துக்குடி அருகே சோகம்!
சனி 25, ஜூலை 2026 10:45:32 AM (IST)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 25, ஜூலை 2026 10:13:53 AM (IST)

தூத்துக்குடி ஏர்போர்ட் அருகே ரூ.100 கோடி அரசு தரிசு நிலம் ஆக்கிரமிப்பு: நீதிபதியிடம் மனு அளிக்கப் பொதுமக்கள் முடிவு!
சனி 25, ஜூலை 2026 8:39:53 AM (IST)








