» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்டெய்னர் யார்டு ஒரு மாதத்தில் மாற்றம் : நிறுவனங்கள் உறுதி - போராட்டம் வாபஸ்!

வியாழன் 25, ஜூன் 2026 5:06:00 PM (IST)



தூத்துக்குடியில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கண்டெய்னர் யார்டை அகற்றக் கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பொன்னான்டி நகர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கண்டெய்னர் யார்டை அகற்றக் கோரியும், அங்கு வரும் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கக் கோரியும் முத்தையாபுரத்தில் இன்று (25-06-2026) காலை மறியல் போராட்டம் நடத்தப் பொதுமக்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைத் தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அவசரச் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர், முத்தையாபுரம் காவல் நிலைய அதிகாரிகள், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், புதுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் மற்றும் முள்ளக்காடு பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கூட்டத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பின்வரும் முக்கிய முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. கனரக வாகனங்களின் நிறுவனர்கள் அந்த இடத்திலிருந்து 3 மாதத்திற்குள் வேறு இடத்திற்கு வாகனங்களை மாற்றம் செய்வதாக உறுதியளித்தனர்.

கண்டெய்னர் யார்டு நிறுவனர்கள் அந்த இடத்திலிருந்து 1 மாத காலத்திற்குள் தங்களது யார்டை வேறு இடத்திற்கு முழுமையாக மாற்றம் செய்வதாக உறுதி அளித்தனர். இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory