» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!

வியாழன் 25, ஜூன் 2026 3:44:11 PM (IST)



கோவில்பட்டியில் சட்டவிரோதமாக விற்பனைக்காகக் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த வாலிபரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடராஜபுரம் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் விற்பனை நடப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீசார் இன்று நடராஜபுரம் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு நபரைப் பிடித்துப் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த 1 கிலோ கஞ்சாவைப் போலீசார் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (35) என்பது தெரியவந்தது. இது குறித்துக் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory