» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூகநல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:57:30 AM (IST)
தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தொகுப்புதிய ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி சமூகநல அலுவலகத்தில் தொகுப்புதிய ஒப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணிக்கு நியமனம் செய்ய கீழ்க்காணும் உரிய தகுதிகளை கொண்ட நபர்கள் விண்ணப்பம் செய்யலாம். இளநிலை உதவியாளர் /தட்டச்சர் பதவிக்கு தகுதிகள்;
1. கல்வித் தகுதி இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் (Lower and Higher) தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
2. வயது; 22 முதல் 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
3. முன் அனுபவம்; தட்டச்ச்சு தொடர்பாக பணியில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. தொகுப்பு ஊதியம்; பிரதி மாதம் ரூ.12,000/-
5. விண்ணப்பத்தாரர் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அந்த சுற்றுவட்டாரத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இளங்கலை பட்டம் தேர்ச்சி சான்றிதழ் நகல்கள் - 2, தமிழ் மற்றும் இளங்கலை தட்டச்சு (Lower and Higher) சான்றிதழ்களின் நகல்கள்-2, இருப்பிட சான்று நகல்கள்-2, சாதிச்சான்று நகல்கள் - 2, வருமான சான்று நகல்கள்-2, தற்போதயை பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகிய தக்க ஆவணங்களுடன் 10.07.2026 க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தூத்துக்குடி மாவட்டம்-628101, தொலைபேசி எண்: 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் காயம்!
வியாழன் 25, ஜூன் 2026 12:50:57 PM (IST)

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி : தவெக நிர்வாகி மீது பரபரப்பு புகார்!
வியாழன் 25, ஜூன் 2026 12:42:04 PM (IST)

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலை இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்: கரு நாகராஜன் பங்கேற்பு!
வியாழன் 25, ஜூன் 2026 11:28:11 AM (IST)

இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக்: ஜம்மு காஷ்மீரை வீழ்த்தித் தமிழ்நாடு அணி சாம்பியன்!
வியாழன் 25, ஜூன் 2026 11:04:23 AM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!
வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)

குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!
வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)








