» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாலுமி நிஷாந்த் மனைவிக்குத் தற்காலிகப் பணியா..? நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் கண்டனம்!

வியாழன் 25, ஜூன் 2026 10:38:02 AM (IST)

ஓமன் கடற்பகுதியில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி நிஷாந்த்தின் மனைவிக்குத் தற்காலிக ஒப்பந்தப் பணி வழங்கி விளம்பரப்படுத்தியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தமிழக அரசுக்கு நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த் ஓமன் கடற்பகுதியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருதி அவரது மனைவிக்குத் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணி ஆணை வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தூத்துக்குடி நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சார்பில் கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் விஜய் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோரிடம் நாங்கள் கோரியது, கப்பல் மாலுமிகள் சட்டத்தில் உள்ளபடி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், கடந்த காலங்களில் தமிழக அரசுகளால் வழங்கப்பட்டு வந்த நடைமுறையின்படி மாநில அரசுப் பிரிவில் நிரந்தரப் பணியும்தான். ஆனால், தற்போதைய அரசு உரிய உதவிகளைச் செய்துவிட்டதாகத் தங்களைக் காட்டி ஏமாற்றி, வெறும் தற்காலிக ஒப்பந்தப் பணி ஆணையை வழங்கி விளம்பரப்படுத்தியுள்ளது.

இந்த அரசுக்குக் கடலோடி மற்றும் மீனவ மக்களிடம் அவப்பெயரை ஏற்படுத்த விரும்பும் சில அதிகாரிகள், மறைந்த மாலுமி நிஷாந்த் குடும்பத்திற்குப் பின்னணியில் துரோகம் இழைத்து இத்தகைய தற்காலிகப் பணியை வழங்கியுள்ளனர். இதனை நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கடலோடிகளின் மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.

அமைச்சர் ஸ்ரீநாத் கடலோடி மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய நினைக்கிறார் என்றால், தற்போது தூத்துக்குடி கப்பல் மாலுமி நிஷாந்த் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக ஒப்பந்தப் பணி ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அதற்குப் பதிலாக, உயிரிழந்த நிஷாந்த்தின் மனைவிக்கு மாவட்ட வருவாய்த்துறையிலோ அல்லது மீன்வளத்துறையிலோ தகுதியான நிரந்தரப் பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என அவ்வியக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory