» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 32 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்!

வியாழன் 25, ஜூன் 2026 10:52:22 AM (IST)

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற வாலிபரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் இன்று காலை தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மேல சண்முகபுரம் ரோட்டில் இருசக்கர வாகனம் ஒன்றுடன் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு நபரை போலீசார் இடைமறித்துச் சோதனை செய்தனர்.

அப்போது அவர், இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்துச் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரிடமிருந்த 32 மதுபான பாட்டில்கள், 1,010 ரூபாய் ரொக்கப் பணம், 2 மொபைல் போன்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் அந்த நபரைத் தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் மேல சண்முகபுரம் வண்ணார் முதல் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் நடராஜன் (40) என்பதும், அரசு மதுபானக் கடைகளில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்ததும்  தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory