» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் 1½ கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது!
சனி 20, ஜூன் 2026 7:55:08 AM (IST)

கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். 1½ கிலோ கஞ்சா மற்றும் ரூபாய் 21,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ்நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அந்தப் பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் போது, ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (43) என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீஹா இதுகுறித்து முறைப்படி வழக்குப் பதிவு செய்து, கஞ்சா விற்பனையாளர் முருகேசனை கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட முருகேசனிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1½ கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை மூலம் ஈட்டப்பட்ட ரூபாய் 21,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சீரழிவுக்குக் காரணமான கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:37:39 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நிறுவன தின விழா: 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:27:04 PM (IST)

சட்டவிரோதமாக மதுபான விற்பனை: ஒருவர் கைது!
சனி 20, ஜூன் 2026 11:49:52 AM (IST)

கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் : மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சனி 20, ஜூன் 2026 11:40:05 AM (IST)

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 20, ஜூன் 2026 11:25:11 AM (IST)

காதலியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் சோகம்!
சனி 20, ஜூன் 2026 11:16:27 AM (IST)









