» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதலியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் சோகம்!
சனி 20, ஜூன் 2026 11:16:27 AM (IST)
தூத்துக்குடியில் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன வேதனையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி கேம்ப்-1, முத்துநகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் மகன் முத்துபாண்டி (19). இவர் சிறுவயது முதல் அவரது வளர்ப்பு தந்தையான மூர்த்தி என்பவரது வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். மேலும் அவர் அவர் தனது உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகக் காதலர்கள் இருவருக்கும் இடையே திடீரெனக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான முத்துபாண்டி, யாரிடமும் சரியாகப் பேசாமல் மிகுந்த மன வேதனையுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முத்துபாண்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:37:39 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நிறுவன தின விழா: 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:27:04 PM (IST)

சட்டவிரோதமாக மதுபான விற்பனை: ஒருவர் கைது!
சனி 20, ஜூன் 2026 11:49:52 AM (IST)

கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் : மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சனி 20, ஜூன் 2026 11:40:05 AM (IST)

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 20, ஜூன் 2026 11:25:11 AM (IST)

மது குறைவாகக் கொடுத்ததால் வாலிபர் அடித்துக் கொலை : 4பேர் கைது - பரபரப்பு தகவல்!
சனி 20, ஜூன் 2026 10:53:26 AM (IST)









