» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோதமாக மதுபான விற்பனை: ஒருவர் கைது!
சனி 20, ஜூன் 2026 11:49:52 AM (IST)
தூத்துக்குடி அருகில் டாஸ்மாக் கடை பின்புறம், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, 66 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தருவைகுளம் காவல் நிலைய தலைமை காவலர் சின்னத்துரை மற்றும் போலீசார் தீவிர இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சமத்துவபுரம் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில், நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தார்.
போலீசார் அங்குச் சென்று சோதனையிட்ட போது, அவர் அங்கு கள்ளச்சந்தையில் மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த முருகன் மகன் முத்துராஜா (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 66 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை கைப்பற்றினர். இது குறித்து தருவைகுளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:37:39 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நிறுவன தின விழா: 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:27:04 PM (IST)

கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் : மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சனி 20, ஜூன் 2026 11:40:05 AM (IST)

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 20, ஜூன் 2026 11:25:11 AM (IST)

காதலியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் சோகம்!
சனி 20, ஜூன் 2026 11:16:27 AM (IST)

மது குறைவாகக் கொடுத்ததால் வாலிபர் அடித்துக் கொலை : 4பேர் கைது - பரபரப்பு தகவல்!
சனி 20, ஜூன் 2026 10:53:26 AM (IST)









