» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பள்ளி நேரத்தில் வாகனத் தணிக்கை : போலீசாரின் செயலால் பெற்றோர், மாணவர்கள் அவதி!
வெள்ளி 19, ஜூன் 2026 3:51:56 PM (IST)
தூத்துக்குடியில் மாணவர்களைப் பள்ளியில் விட வரும் மற்றும் அழைத்துச் செல்லும் பெற்றோர்களிடம் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், பள்ளி நேரத்தில் தேவையற்ற வாகனத் தணிக்கை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் அமைந்துள்ள துறைமுகப் பள்ளியில் இந்த ஆண்டு முதல் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா சி.பி.எஸ்.இ. (CBSE) பாடத்திட்டம் தொடங்கப்பட்டு, பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்பள்ளியில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று, தற்போது ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி தொடங்கும் நேரத்திலும் மற்றும் மாலை பள்ளி முடியும் நேரத்திலும் மாணவ-மாணவிகளைப் பெற்றோர்கள் பள்ளியில் விட வரும்போதும், திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போதும் போலீசார் அப்பகுதிச் சாலைகளில் நின்று தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி நேர நெரிசலில் போலீசார் மேற்கொள்ளும் இந்த வாகனத் தணிக்கை தங்களுக்குப் பெரும் நெருக்கடியையும், தேவையற்ற நேர விரயத்தையும் ஏற்படுத்துவதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நாள் முழுவதும் பள்ளியில் படித்துவிட்டு மிகுந்த களைப்புடன் வரும் மாணவர்களுக்குப் போலீசாரின் இந்தச் செயல்பாடு கடும் மன அழுத்தத்தை உருவாக்குவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று பள்ளி அருகே மாணவரை அழைக்க வந்த மாநகராட்சி ஊழியர் ஒருவரிடம், அங்குப் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பள்ளி நேரங்களில் பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டரின் செயல்பாடுகள் குறித்து உயர்திகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் தேசிய வாசிப்பு தினம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்!
வெள்ளி 19, ஜூன் 2026 5:43:21 PM (IST)

போதையில் கார் ஓட்டி விபத்து: தூத்துக்குடி மாநகராட்சி சஸ்பெண்ட் அதிகாரி அதிரடி கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 5:02:07 PM (IST)

கோவில்பட்டியில் தொடரும் சாலை விபத்துக்கள் : பல்வேறு அமைப்புகள் திரண்டு போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:57:45 PM (IST)

தூத்துக்குடி ஐடிஐ-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:22:18 PM (IST)

சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)









