» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோ மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:45:35 AM (IST)
திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த முதியவர், மேலரத வீதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத ஆட்டோ மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் ரவிச்சந்திரன் (62). இவர் நேற்று மதியம் 02:00 மணி அளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி கும்பிடுவதற்காகத் தூத்துக்குடியில் இருந்து பேருந்து மூலம் திருச்செந்தூர் சென்றுள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி, அவர் கோவிலை நோக்கி மேலரத வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று, எதிர்பாராதவிதமாக ரவிச்சந்திரன் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்து மயக்க நிலையில் சாலையோரம் கிடந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துதிருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சாவு : தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:47:24 AM (IST)

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டு சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 10:34:03 AM (IST)

மாதாந்திர பராமரிப்பு பணி: சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி உட்பட பல பகுதிகளில் நாளை மின்தடை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:19:53 AM (IST)









