» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சாவு : தூத்துக்குடியில் சோகம்!

வெள்ளி 19, ஜூன் 2026 11:47:24 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் முதலாவது தெரு, பொன்சுப்பையா நகரைச் சேர்ந்தவர் பாலு மனைவி சரோஜா (64). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தானாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, காயம் அடைந்த சரோஜாவை உறவினர்கள் மீட்டு உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory