» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராகுல் காந்தி பிறந்தநாள்: முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் சார்பில் காலை உணவு விநியோகம்!

வெள்ளி 19, ஜூன் 2026 10:11:35 AM (IST)



தூத்துக்குடியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி தலைமையில் சிதம்பர நகரில் அமைந்துள்ள 'பாசக்கரங்கள்' முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்குக் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தலைவர் ஜெயக்கொடி இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் பெத்துராஜ், மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், மீனவரணி மிக்கேல் குரூஸ், பழங்குடியினர் பிரிவுத் தலைவர் முனியசாமி, மகிளா காங்கிரஸைச் சேர்ந்த தனலட்சுமி, இசக்கியம்மாள், ஜெஸ்ஸி மற்றும் கட்சி நிர்வாகிகள் செல்வமுருகன், முருகேசன், எஸ்.எம்.டி.சுந்தர்ராஜ், சாந்தகுமார், பாலகிருஷ்ணன், காமராஜ், மாரியப்பன், முத்துராஜ், தெர்மல் முத்து, ஷேக்ஸ்பியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory