» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கிற்குத் தீவைப்பு : போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:37:03 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனி 7-ஆவது தெரு, கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் இசக்கி ராஜா (37). இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தைத் வீட்டின் முன்புற வாசலில் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று (ஜூன் 16) அதிகாலை சுமார் 3:00 மணி அளவில், அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், இசக்கி ராஜாவின் பைக்கிற்குத் தீ வைத்துள்ளனர்.
வண்டியில் தீப்பற்றி எரியும் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்த இசக்கி ராஜா, வண்டி முற்றிலும் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், பைக்கில் எம்பிக் கொண்டிருந்த தீயை மேலும் பரவாதவாறு அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், அதற்குள் இருசக்கர வாகனம் பெருமளவு சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து இசக்கி ராஜா தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நள்ளிரவில் பைக்கிற்குத் தீவைத்துத் தலைமறைவான மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகப் போராட்டம்: புரட்சிப் படை இயக்கம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:42:40 PM (IST)

பிஆர்ஓக்கள் பணியிட மாற்றத்தில் பெரும் குளறுபடி: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:11:09 PM (IST)

முதலமைச்சர் மாநில இளைஞர் விருக்கு ஜூலை 6-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:30:21 PM (IST)

தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:07:20 PM (IST)

போதை மறுவாழ்வு மையத்திலிருந்து திரும்பிய வாலிபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:35:59 AM (IST)

தசரா திருவிழாவில் சினிமா ஆடல், பாடல்களுக்கு முற்றிலும் தடை: கோவில் நிர்வாகம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:52:01 AM (IST)









