» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மினி பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் கைது!

ஞாயிறு 14, ஜூன் 2026 9:10:23 AM (IST)

தூத்துக்குடியில் மினி பஸ் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, நடுரோட்டில் மினி பஸ்சை வழிமறித்துக் கல்வீசி முன்பக்கக் கண்ணாடியை உடைத்த மற்றொரு மினிபஸ்  பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வீர சந்தோஷ் (26). இவர் தூத்துக்குடி நகரப் பகுதியில் மினி பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். அதேபோல், தூத்துக்குடி கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவரும் மினி பேருந்து ஓட்டுநராக உள்ளார். ஒரே வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கி வந்த இவர்கள் இருவருக்கும் இடையே பேருந்து இயக்குவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் வீர சந்தோஷ் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தாளமுத்துநகர் வரை இயக்கப்படும் மினி பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளமுத்துநகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். மினி பேருந்து தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜபாளையத்திற்கு வந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சதீஷ் அந்த மினி பேருந்தை அதிரடியாக வழிமறித்து நிறுத்தினார்.

தொடர்ந்து பேருந்துக்குள் ஏறிச் சென்ற சதீஷ், ஓட்டுநர் வீர சந்தோஷிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சதீஷ் பேருந்திலிருந்து கீழே இறங்கி, தரையில் கிடந்த பெரிய கல்லை எடுத்து மினி பேருந்தின் மீது வீசினார். இதில் மினி பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி முற்றிலும் உடைந்து நொறுங்கியது. பேருந்துக்குள் பயணிகள் இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வீர சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து, பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஓட்டுநர் சதீஷை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory