» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்த முக்கியக் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி, புதியம்புத்தூரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி கதிர்வேல் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பகுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் வார்டு வாரியாகக் கட்சியின் பலத்தை அதிகரிப்பது மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் அடித்தட்டு மக்களிடம் கட்சியின் கொள்கைகளைக் கொண்டு சேர்ப்பதற்கான அடுத்தகட்டப் பிரச்சாரப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மினி பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் கைது!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:10:23 AM (IST)

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)









