» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அண்ணாமலையின் புதிய இயக்கம் ஆட்சியைப் பிடிக்கும் : தூத்துக்குடி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்!
திங்கள் 8, ஜூன் 2026 9:42:38 PM (IST)

தமிழகத்தில் திமுக, தவெக-வுக்கு மாற்றாக அண்ணாமலையின் புதிய இயக்கம் ஆட்சியைப் பிடிக்கும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஜகவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகிப் புதிய இயக்கத்தில் இணைவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது குறித்தும் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அண்ணாமலை, "WE THE LEADERS" என்ற புதிய அமைப்பைத் தொடங்கி உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக முன்னாள் துணைத் தலைவர் உமரி சத்தியசீலன் தலைமையில் தூத்துக்குடியில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜகவிலிருந்து ஒட்டுமொத்தமாகப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் விலகி, அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த உமரி சத்தியசீலன் கூறியதாவது: "தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுங்கட்சியான திமுக மற்றும் புதிய வரவான தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றான ஒரு மிகச்சிறந்த மக்கள் சக்தியாக அண்ணாமலையின் புதிய இயக்கம் உருவெடுத்துள்ளது. வரும் காலத்தில் இவ்வியக்கம் தமிழகத்தில் முறைப்படி ஆட்சியைப் பிடிக்கும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜகவில் உள்ள நிர்வாகிகளில் சுமார் 60% பேர் விரைவில் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைய உள்ளோம். இதற்கான முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய 15 இடங்களில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன." என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கியப் பொறுப்பாளர்களான சின்ன தங்கம், பொய் சொல்லலான் உட்படப் பழைய பாஜகவிலிருந்து விலகிய மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

பழைய இரும்புக்கடையில் திருட்டு: 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:31:34 PM (IST)

ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர் : கீதாஜீவன் முன்னிலையில் ஐக்கியம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:11:38 PM (IST)

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 485 கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
திங்கள் 8, ஜூன் 2026 4:01:04 PM (IST)

இறையடியார் அந்தோனி சூசை நாதருக்கு புனிதர் பட்டம்: தூத்துக்குடியில் சிறப்பு பிரார்த்தனை!
திங்கள் 8, ஜூன் 2026 3:40:41 PM (IST)










