» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது: தூத்துக்குடி பூ மார்க்கெட் டாஸ்மாக் கடை மூடல்!
வெள்ளி 5, ஜூன் 2026 9:33:23 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டதால் நீண்ட கோரிக்கை நிறைவேறியதாக அப்பகுதி பொதுமக்கள் திருஷ்டி சுற்றி உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 30-வது வார்டில் உள்ள முக்கிய வணிகப் பகுதியான பூ மார்க்கெட் வளாகத்தின் அருகே இந்த டாஸ்மாக் மதுபானக் கடை நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்தது. இக்கடையின் பெண் வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும், மதுப்பிரியர்களின் இடையூறுகளால் அப்பகுதியில் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன.
இதன் காரணமாக, இந்த மதுபானக் கடையை உடனடியாக இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பொதுமக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், மதுபானக் கடையை அங்கிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த முறைப்படி உத்தரவிட்டனர்.
அதன்படி, இன்று அக்கடை அங்கிருந்து முழுமையாக காலி செய்யப்பட்டு, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. தங்கள் பகுதியின் மிக முக்கியப் பிரச்சைனைக்குத் தீர்வு கிடைத்து, நீண்ட நாள் கனவு நிறைவேறியதால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகள் கடையின் முன்பு பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றித் திருஷ்டி சுற்றி தங்களின் மகிழ்ச்சியைப் வெளிப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கொத்தனார் படுகொலை: அண்ணன், தம்பி உள்பட 3பேருக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 5, ஜூன் 2026 7:30:17 PM (IST)

தருவைகுளம் கடற்கரையைத் தூய்மைப்படுத்திய தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:41:57 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

ஜமாபந்தியில் இதுவரை மொத்தம் 309 மனுக்கள் : 19 பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:57:58 PM (IST)

டி.சி.டபிள்யூ. நிறுவனத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் : திடக்கழிவு மேலாண்மை அறிமுகம்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:22:59 PM (IST)

மகனுடன் குடும்பத் தகராறில் விபரீதம்: விஷம் குடித்த தந்தை உயிரிழப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:49:02 AM (IST)










