» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கொத்தனார் படுகொலை: அண்ணன், தம்பி உள்பட 3பேருக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 5, ஜூன் 2026 7:30:17 PM (IST)
கடந்த 2018-ஆம் ஆண்டு தசரா திருவிழாவின் போது, முன்விரோதம் காரணமாகக் கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் முருகேசன் (40) என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, முருகேசனின் சித்தப்பாவை மாரிசாமி மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் இருந்தது. இவ்வழக்கில் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தன் சித்தப்பாவின் கொலைக்குக்கு பழிவாங்கச் சரியான தருணத்திற்காகக் காத்திருந்தார்.
முத்தையாபுரம் ராஜீவ் நகர் பகுதியில் கடந்த 14/10/2018 அன்று தசரா திருவிழா நடைபெற்ற போது, மாரிசாமியை முருகேசன் வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது மாரிசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பித்து, முருகேசனைப் பின்தொடர்ந்து துரத்தினர். ராஜீவ் நகர் 7-வது தெருவில் வைத்து முருகேசனை வளைத்துப் பிடித்து அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டியும், கற்களால் தாக்கியும் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்தனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தின் அப்போதைய சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு வழக்குப் பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் சிவசெந்தில் குமார் விசாரித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொத்தனார் முருகேசனைக் கொலை செய்த குற்றத்திற்காக, இவ்வழக்கின் முதன்மை குற்றவாளிகளான முத்தையாபுரத்தைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளர்கள் மாரிசாமி (44), அவரது சகோதரர் சரவணன் (35) மற்றும் இவர்களது கூட்டாளியான மூக்காண்டி (39) ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தாண்டவம் உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ஏனைய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது: தூத்துக்குடி பூ மார்க்கெட் டாஸ்மாக் கடை மூடல்!
வெள்ளி 5, ஜூன் 2026 9:33:23 PM (IST)

தருவைகுளம் கடற்கரையைத் தூய்மைப்படுத்திய தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:41:57 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

ஜமாபந்தியில் இதுவரை மொத்தம் 309 மனுக்கள் : 19 பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:57:58 PM (IST)

டி.சி.டபிள்யூ. நிறுவனத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் : திடக்கழிவு மேலாண்மை அறிமுகம்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:22:59 PM (IST)

மகனுடன் குடும்பத் தகராறில் விபரீதம்: விஷம் குடித்த தந்தை உயிரிழப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:49:02 AM (IST)










