» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்தபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி பரிதாப சாவு!

வெள்ளி 5, ஜூன் 2026 11:42:19 AM (IST)

திருச்செந்தூர் அருகே வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்தபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கீழப்பள்ளிபத்து பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை மனைவி பானுமதி (71). இந்த தம்பதியருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் வாழ்வாதாரம் மற்றும் பணிகளின் நிமித்தமாக வெளியூர்களில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். 

இதனால், பானுமதி மட்டும் கீழப்பள்ளிபத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இன்று காலையில் பானுமதி தனது வீட்டின் முற்றம் தெளிப்பதற்காகப் தண்ணீர் கொண்டு வந்து வாசலில் தெளித்துள்ளார். அப்போது, வீட்டின் வாசலில் வீட்டிற்கு மின்சார இணைப்பு கொண்டு வருவதற்காக நட்டு வைக்கப்பட்டிருந்த இரும்பு மின் கம்பியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இதனை அறியாத பானுமதி, வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த மின் கம்பியைத் தொட்டுள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory