» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகனுடன் குடும்பத் தகராறில் விபரீதம்: விஷம் குடித்த தந்தை உயிரிழப்பு!

வெள்ளி 5, ஜூன் 2026 11:49:02 AM (IST)

தூத்துக்குடி அருகே சொத்துப் பிரச்சனை காரணமாக மகனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முதியவர் ஒருவர், பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே ஏ.எம்.பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கொம்பையா மகன் மாரியப்பன் (75). இவரது மனைவி கருப்பாயி, 2 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். மாரியப்பன் அதே பகுதியில் தனது சொந்த நிலத்தில் விவசாயத் தொழில் செய்து செய்து வருகிறார். 

இந்நிலையில், மாரியப்பனுக்கும் அவரது மூத்த மகனான வன்னியபெருமாள் என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகச் சொத்துக்களைப் பிரிப்பது சம்பந்தமாகத் தொடர் குடும்பத் தகராறும், கடுமையான வாக்குவாதங்களும் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலையிலும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த மாரியப்பன் யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை  எடுத்துத் திடீரெனக் குடித்துவிட்டார்.

இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தருவைகுளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory