» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்

வெள்ளி 5, ஜூன் 2026 11:15:47 AM (IST)

பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 10-ஆம் தேதி மற்றும் 17-ஆம் தேதிகளில் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. ஒரு சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 17-ஆம் தேதி சுமார் 50 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். வருகிற 10-ஆம் தேதி மற்றும் 24-ஆம் தேதிகளில் செல்லும் வழியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். நாளை (சனிக்கிழமை), வருகிற 7-ஆம் தேதி, 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை, 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை செல்லும் வழியில் சுமார் 25 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666) நாளை, வருகிற 13-ஆம் தேதி மற்றும் 20-ஆம் தேதிகளில் செல்லும் வழியில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 7-ஆம் தேதி, 11-ஆம் தேதி, 14-ஆம் தேதி, 18-ஆம் தேதி மற்றும் 21-ஆம் தேதிகளில் செல் லும் வழியில் சுமார் 45 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.17616) வருகிற 10-ஆம் தேதி மற்றும் 17-ஆம் தேதிகளில் செல்லும் வழியில் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இந்த ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே, மதுரை, விருதுநகர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory