» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை
வெள்ளி 5, ஜூன் 2026 11:02:54 AM (IST)

தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தாெடர்பாக அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள்புரம் 1-வது தெருவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக இச்சாலை முழுவதும் தோண்டப்பட்டது.
மேற்படி பணிகள் நிறைவடைந்த பின்னரும், தற்பொழுது வரை சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது. இதனால், இப்பகுதியில் அவசரச் சிகிச்சை ஊர்திகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமான சூழல் நிலவுவதுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகள் தினசரி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, தாங்கள் இப்பகுதியை நேரில் வந்து கள ஆய்வு செய்து, பொதுமக்களின் நலன் கருதி பெருமாள்புரம் 1-வது தெருவிற்குப் புதிய தார் சாலை அமைத்துத் தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது: தூத்துக்குடி பூ மார்க்கெட் டாஸ்மாக் கடை மூடல்!
வெள்ளி 5, ஜூன் 2026 9:33:23 PM (IST)

தூத்துக்குடியில் கொத்தனார் படுகொலை: அண்ணன், தம்பி உள்பட 3பேருக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 5, ஜூன் 2026 7:30:17 PM (IST)

தருவைகுளம் கடற்கரையைத் தூய்மைப்படுத்திய தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:41:57 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

ஜமாபந்தியில் இதுவரை மொத்தம் 309 மனுக்கள் : 19 பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:57:58 PM (IST)

டி.சி.டபிள்யூ. நிறுவனத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் : திடக்கழிவு மேலாண்மை அறிமுகம்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:22:59 PM (IST)










