» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காங்கிரஸ் மூத்த நிர்வாகி திமுகவில் ஐக்கியம்: கீதா ஜீவன் முன்னிலையில் இணைந்தார்!

வியாழன் 21, மே 2026 4:32:40 PM (IST)



தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். 

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் முரளிதரன் மற்றும் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலையில் எட்டையாபுரம் சாலை கலைஞர் அரங்கில் திமுகவில் இணைந்தனர்.

காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், மண்டலத்தலைவர் ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி, விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயகிங்ஸ்டன் மற்றும் 27 வார்டு தலைவர்கள் உட்படப் பலர் திமுகவில் இணைந்தனர். அவர்களைக் கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து கீதா ஜீவன் வரவேற்றார்.

திமுகவில் இணைந்த பின் முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 14 ஆண்டுகளாக திமுகவுடன் இணக்கமாக இருந்த காங்கிரஸ் தலைமை, தற்போது கொள்கைகளைத் துறந்துவிட்டு 2 அமைச்சர் பதவிகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்துடன்  கூட்டணி அமைத்துள்ளது. தூத்துக்குடி காங்கிரஸ் தலைவர்கள் சகாயராஜ், பெருமாள்சாமி ஆகியோர் கூட்டணி தர்மத்திற்கு எதிராகச் செயல்பட்டனர். 

36 ஆண்டுகள் காங்கிரஸில் உழைத்த எங்களது கருத்துக்களைத் தலைமை மதிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் பாஜகவின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார். உண்மையான காங்கிரஸாரான நாங்கள் இனி கடைசி வரை திமுகவிற்கு விசுவாசமாகப் பணியாற்றுவோம் என்றார். இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டல, பகுதிச் செயலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

muthuமே 22, 2026 - 01:48:39 PM | Posted IP 172.7*****

பல ஓட்டைகள் விழுந்து மூழ்கி கொண்டு இருக்கிற திமுக என்ற கப்பலில் ஏறி பயணம் செய்யாதீர்.விரைவில் மூழ்கி விடும்

அதுமே 21, 2026 - 06:09:11 PM | Posted IP 104.2*****

எந்த பயனும் இல்லை . முடிந்து விட்டது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory