» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!

சனி 23, மே 2026 4:13:17 PM (IST)



தூத்துக்குடி கால்நடை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி புதுகிராமத்தில் உள்ள கால்நடைகளுக்கான பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள பெரிய பிராணிகள் அறுவை சிகிச்சை கூடம், மருந்துகள் இருப்பு அறை, நுன்கதிர் வீச்சு அறை, பெரிய பிராணிகள் சிகிச்சை கூடத்தில் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும், கால்நடை மருத்துவ ஆய்வுக் கூடம், பிரதம மருத்துவர் அறை, சிறிய மற்றும் செல்ல பிராணிகள் அறுவை சிகிச்சை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு,  ஹைபிரிட் ஹைய்டிபன்சிவ் யூனிட், அதிநவீன இருதய சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். பின்னர், மருத்துவமனை வளாகம், உள் மற்றும் புற நோயாளிகள் கண் சிகிச்சை பிரிவு, புற்று நோய் கதிர்வீச்சு பிரிவு, சிறுநீரக சிகிச்சை பிரிவு மற்றும் இரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும், மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயார் செய்யும் நவீன சமையலறை கூடம், மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவு, இரத்த மையம், ஆண்கள் புறநோயாளிகள் மருத்துவ பகுதி, தொற்றா நோய்களுக்கான தடுப்பு கண்டறிதல் பிரிவு ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தில் ரூபாய் 13635.07 இலட்சம்  மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கோரம்பள்ளம் குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அடுத்ததாக, தாமிரபரணி ஆற்றின் குறுக்கே காலாங்கரை முதல் அத்திமரப்பட்டி வரை செல்லும் உப்பாற்று ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்திலிருந்து உப்பாற்று ஓடை சீரமைப்பு செய்யப்பட்டதை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கை தொடர்பாக பொதுப்பணித்துறையினருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும் உப்பாத்து ஓடையின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருவதையும், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உப்பாத்து ஓடையில் 24 கண் மதகுகளை பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் செங்குளம் கால்வாயிலிருந்து வெளியேறும் மழைநீர் உப்பாற்று ஒடையில் வந்து சேரும் வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்படவுள்ளதை வீரநாயக்கதட்டு பகுதியில் பார்வையிட்டார். 

எஸ்பிஐ குடோன் அருகில் மாநகராட்சி சார்பில் பக்கிள் ஓடை அபிவிருத்தி பணிகள் நடைபெறவுள்ளதை பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சி, திரு.வி.க நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீர் இனி வருங்காலங்களில் தேங்காமல் இருப்பதற்கு மாநகராட்சி சார்பில் என்னென்ன முன்னெச்சரிக்கை பணிகள் செய்யப்படவுள்ளது குறித்து பார்வையிட்டார். 



மாநகராட்சி பி&டி காலணி, 16வது தெரு முத்துகிருஷ்ணநகர் பகுதி மற்றும் ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் மழைகாலங்களில் தேங்கியுள்ள தண்ணீரினை மின்மோட்டார் கொண்டு வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள நீர் இறைப்பு நிலையங்களை (Pumping Stations) பார்வையிட்டார். அடுத்ததாக கோக்கூர் குளம் மறுசீரமைக்கப்பட்டு வருவதையும், சங்கரப்பேரி விலக்கு பகுதியில் மழைநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாயினையும், புதூர் பாண்டியாபுரம் பகுதியில் உள்ள பெரியப்பலோடை சீரமைப்பு பணிகளையும் மாவட்ட ஆட்சியர்பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மண்டல இணை இயக்குநர், கால்நடைபராமரிப்புத் துறை விஜயக்குமார், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலேஸ் தவமணி, செயற்பொறியாளர், நீர்வளத்துறை, கோரம்பள்ளம் மற்றும் கீழ்தாமிரபரணி வடிநிலக் கோட்டம் தங்கராஜன், பொதுப்பணித்துறை, மருத்துவதுறை மற்றும் மாநகராட்சி சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory