» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிசி ஆலை பாய்லரில் தவறி விழுந்து வடமாநிலத் தொழிலாளி பலி!
சனி 23, மே 2026 8:16:22 PM (IST)
தூத்துக்குடி அருகே உள்ள தனியார் அரிசி ஆலையின் பாய்லரைச் சுத்தம் செய்யும் போது, தவறி விழுந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் கிராமத்தின் அருகே, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரன் மாவட்டம் நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்பிரவேஷ் ராம் என்பவரது மகன் பிக்ரம் குமார் (29). இவர் இந்த அரிசி ஆலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இன்று காலை ஆலை உள்கட்டமைப்பில் உள்ள பிரதான அரிசி அவிக்கும் பாய்லரை சுத்தம் செய்யும் கடினமான பணியில் பிக்ரம் குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி பாய்லருக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த சக தொழிலாளர்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தினர், பிக்ரம் குமாரை மீட்டு உடனடியாக எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த அவசரப்பிரிவு மருத்துவர்கள், பிக்ரம் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது சடலம் உடற்கூராய்விற்காகத் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்னி வேனில் கடத்திய 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! – ஓட்டுநர் கைது!
சனி 23, மே 2026 8:21:50 PM (IST)

மனைவியுடன் குடும்பத் தகராறு: வாலிபர் தற்கொலை!
சனி 23, மே 2026 8:08:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் புதிய எஸ்பி அபிஷேக் குப்தா சந்திப்பு!
சனி 23, மே 2026 5:26:50 PM (IST)

தமிழ்நாட்டை லாட்டரி குடும்பம் தான் ஆட்சி செய்கிறது: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேட்டி!
சனி 23, மே 2026 4:52:42 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
சனி 23, மே 2026 4:13:17 PM (IST)

டூவிபுரம் பூங்காவில் மேயர், ஆணையர் ஆய்வு! – குறைகளை 1 மணி நேரத்தில் சரிசெய்ய உத்தரவு!
சனி 23, மே 2026 3:39:58 PM (IST)










