» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!
வெள்ளி 8, மே 2026 7:57:31 PM (IST)
கோவில்பட்டி அருகே சட்டவிரோத விற்பனைக்காக 139 கிலோ புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று (07.05.2026) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கோவில்பட்டி மந்திதோப்பு - பாண்டவர்மங்கலம் சாலை சந்திப்பு பகுதியில் போலீசார் வாகனங்களைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரது வாகனத்தைச் சோதனையிட்டனர்.
சோதனையில், அந்த நபர் சட்டவிரோத விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாகக் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (50) என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை உடனடியாகக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 139 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கடத்தலில் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)










