» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
பாஜக தூத்துக்குடி கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எங்கும் டிஜிட்டல் பேனர்களோ, விளம்பர பதாகைகளோ வைக்கக் கூடாது என்று சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், தூத்துக்குடி மாநகராட்சியின் பல இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
மாநகராட்சியின் முக்கியச் சந்திப்புகள், சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் போக்குவரத்தை மறைக்கும் வகையில் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுவதாகவும், மக்கள் பாதுகாப்பிற்கு இவை அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்களையும் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக அகற்ற வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிகழ்வின் போது, மண்டல துணைத் தலைவர் ஜெயரூபி, மண்டல செயலாளர் விஜயன், ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மாவட்ட செயலாளர் ஐயப்பன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)

ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து இளம்பெண் பலி
புதன் 13, மே 2026 4:24:48 PM (IST)










