» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)
தூத்துக்குடி அருகே தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள நட்டாத்தி, எள்ளன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் முருகேஸ்வரி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள நர்சிங் ஹோமில் பி.எஸ்சி நர்சிங் முடித்துவிட்டு, அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு தனது மருத்துவமனைப் பணியை முடித்துவிட்டு முருகேஸ்வரி வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இரவு உணவருந்திவிட்டு உறங்கச் சென்ற அவர், இன்று காலை வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் உள்ளே சென்று பார்த்தபோது, முருகேஸ்வரி சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து உடனடியாகச் சாயர்புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முருகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து இளம்பெண் பலி
புதன் 13, மே 2026 4:24:48 PM (IST)










