» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து இளம்பெண் பலி
புதன் 13, மே 2026 4:24:48 PM (IST)
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியில் ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது மகள் அமுதா (26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்ததோடு, அவருக்குத் தீவிர வலிப்பு நோயும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று காலை அமுதா வீட்டின் ஏணி வழியாக மாடிக்கு ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நிலைகுலைந்த அவர் ஏணியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)










