» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி மோதி விபத்து: செங்கல் சூளை உரிமையாளர் பலி!

வெள்ளி 8, மே 2026 7:51:25 PM (IST)

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், செங்கல் சூளை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (80). இவர் முத்துலாபுரம் வைப்பாற்றின் கரையோரம் செங்கல் சூளை நடத்தி வந்தார். இன்று மாலையில், சுப்பிரமணியன் தனது செங்கல் சூளையிலிருந்து டீ குடிப்பதற்காகத் தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். 

இதற்காக அவர் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார்.அப்போது, தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாகச் சுப்பிரமணியன் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

விபத்து குறித்துத் தகவலறிந்த மாசாற்பட்டி போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுப்பிரமணியனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory