» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி!
வெள்ளி 8, மே 2026 7:38:05 PM (IST)

தூத்துக்குடி தாமோதரநகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி, 2025-26 கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் இந்த ஆண்டு மொத்தம் 113 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவி ஆ. பால அனுசியா 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கணக்குப்பதிவியல் மற்றும் பொருளியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவன் சு. ஜெய சூர்யா 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இவர் கணினி அறிவியல் மற்றும் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாணவி பி.என். பால அக்ஷயா 600-க்கு 583 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இவர் கணக்குப்பதிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இப்பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவர்களும் பெற்றுள்ளனர். பாடவாரியாக: கணினி அறிவியல் - 6 மாணவர்கள், கணிதம் - 2 மாணவர்கள், கணக்குப்பதிவியல் - 2 மாணவர்கள், பொருளியல் - 1 மாணவி என மொத்தம் 11 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் தட்சிணமாற நாடார் சங்கத் தலைவர் காளிதாசன், பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர் மற்றும் சங்க நிர்வாகிகள் நேரில் பாராட்டி கௌரவித்தனர்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தட்சிணமாற நாடார் சங்க நிர்வாகிகள் லிங்கசெல்வன், சீனிவாசன் மற்றும் டாக்டர் ஏ. அசோக் ஆகியோர் ரொக்கப்பரிசு மற்றும் பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பள்ளி நலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)










