» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது!
வெள்ளி 8, மே 2026 3:24:42 PM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 14 கிலோ புகையிலை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (42), சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பதும், அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 85,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இப்பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)










