» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை
வெள்ளி 8, மே 2026 12:16:52 PM (IST)
எப்போதும்வென்றான் அருகே வீட்டில் மயங்கிக் கிடந்த வாலிபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வெற்றிவேல் முருகன் (30). இவர் இன்று காலை தனது வீட்டில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வெற்றிவேல் முருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெற்றிவேல் முருகன் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை முடிவிலேயே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)










