» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி கோபித்து கொண்டு சென்றதால் டிரைவர் தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 8, மே 2026 12:09:29 PM (IST)
தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பெருமாள் ராஜ் (34). லாரி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தங்கப்பூ என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பெருமாள் ராஜ் மதுப் பழக்கத்திற்குத் தீவிரமாக அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
மதுப் பழக்கத்தால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட அவரது மனைவி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆறுமுகநேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனைவியை அழைக்கச் சென்றபோது, அவர் வர மறுத்ததால் பெருமாள் ராஜ் மனமுடைந்து காணப்பட்டார்.
வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்த பெருமாள் ராஜ், நேற்று மதியம் முதல் மது போதையில் மனைவியுடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அன்று இரவு அவரது தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பெருமாள் ராஜ் அறையில் சேலையால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)










