» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:26:03 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, முடிவுகளுக்காக அரசியல் கட்சிகள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், பிரதான கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது கட்சி வெற்றி பெற வேண்டி ஆன்மீக வழிபாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த வரிசையில், இன்று காலை முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சேதுபதி ஆகியோரும் உடனிருந்தனர்.
இன்று அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் அவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மூலவர், சண்முகர் ஆகியோருக்கு நடைபெற்ற விசேஷ தீபாராதனைகளைத் தரிசித்தனர். பின்னர் தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை, சத்ரு சம்ஹார மூர்த்தி மற்றும் பெருமாள் சன்னதிகளுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ததைத் தொடர்ந்து, இன்று திருச்செந்தூரில் வழிபாடு நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தை - மகன் கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற போலீசாருக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:51:41 PM (IST)

தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை விரைந்து வழங்க ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:38:07 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

விடுமுறை நாட்களில் ஆதார் சேவை செயல்படும் : தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஏற்பாடு
வியாழன் 30, ஏப்ரல் 2026 11:51:36 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:50:57 AM (IST)









