» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடுமுறை நாட்களில் ஆதார் சேவை செயல்படும் : தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஏற்பாடு

வியாழன் 30, ஏப்ரல் 2026 11:51:36 AM (IST)

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் சேவையை வழங்கி வருகிறது. தற்போது பொதுமக்களின் கூடுதல் வசதிக்காக வார நாட்களில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும்,  ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேலைக்குச் செல்பவர்களின் வசதிக்காகவும், கோடை விடுமுறையில் பள்ளிச் செல்லும் குழந்தைகள் தங்கள் ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைமை அஞ்சலகம் தவிர, தூத்துக்குடி கோட்டத்தைச் சேர்ந்த கீழ்க்காணும் அஞ்சலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன:

ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி, ஆத்தூர், சிதம்பரநகர், ஏரல், காயல்பட்டினம், குலசேகரப்பட்டணம், குரும்பூர், மெஞ்ஞானபுரம், மேலூர், முதலூர், மூக்குப்பீறி, நாசரேத், ஓட்டப்பிடாரம், பரமன்குறிச்சி, புதுக்கோட்டை, சாத்தான்குளம், சாயர்புரம், செய்துங்கநல்லூர், உடன்குடி கிறிஸ்தியானகரம், வல்லநாடு, முத்தையாபுரம், ஆனந்தபுரம், காயாமொழி, கொம்மடிக்கோட்டை, மில்லர்புரம், முடிவைத்தானேந்தல், புதியம்புத்தூர் மற்றும் படுக்கப்பத்து.

கட்டண விவரங்கள்: புதிய ஆதார் பதிவு: இலவசம். 5-7 வயது மற்றும் 15-17 வயதுக் குழந்தைகளுக்குச் செய்யப்படும் கைரேகை/கருவிழிப் புதுப்பித்தல் முற்றிலும் இலவசம். பெயர், முகவரி, வயது, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் திருத்தங்களுக்கு ₹75 கட்டணம் வசூலிக்கப்படும். புகைப்படம், கைரேகை, கருவிழி ஆகியவற்றைப் புதுப்பிக்க ₹125 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப் புதுப்பிக்கப்பட்ட ஆதார் அவசியம் என்பதால், பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலக ஆதார் மையங்களை அணுகிப் பயன்பெறுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory