» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:21:16 AM (IST)

சாத்தான்குளம் அருகே சாலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம், கோமாநேரி கிராமம் கூவைக்கிணற்றிலிருந்து நெடுங்குளம் மற்றும் வேலன்புதுக்குளம் பகுதி விவசாய நிலங்களுக்கு மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கூவைக்கிணறு – நெடுங்குளம் செல்லும் சாலையில் மின்கம்பிகள் தரைமட்டத்திற்கு மிக அருகில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மின்கம்பிகள் மோதிவிடுமோ என்ற அச்சத்திலேயே பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மின்கம்பிகள் இதே நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்குப் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன், மின்வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டுத் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைத்துச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை விரைந்து வழங்க ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:38:07 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

விடுமுறை நாட்களில் ஆதார் சேவை செயல்படும் : தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஏற்பாடு
வியாழன் 30, ஏப்ரல் 2026 11:51:36 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:50:57 AM (IST)

தூத்துக்குடியில்ஆவணங்கள் இருந்தும் நில அபகரிப்பு முயற்சி? நீதி கோரும் முதியவர் குடும்பத்தினர்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:30:15 AM (IST)









