» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ஆண்டு விழா: கலைப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் அசத்தல்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:10:02 AM (IST)

தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி விழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி மாணவர்களுக்கு முக சித்திரம் வரைதல், நெருப்பில்லாமல் சமைத்தல், பென்சில் ரங்கோலி மற்றும் ஓவியம் வரைதல், துணி ஓவியம் மற்றும் கழிவிலிருந்து கலைப்படைப்புகள் உருவாக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், தனிநபர் மற்றும் குழுப் பாடல்கள், இசைக் குழுவின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் 'மிஸ்டர் & மிஸ் மீன்வளம்' ஆகிய போட்டிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
மாணவர் சங்கத் துணைத் தலைவர் பா. கணேசன் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சங்கத்தின் ஆண்டறிக்கையை அவர் வாசித்தார்.ராமநாதபுரம் டி.எம்.என். குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசுகையில்: "மாணவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சரியான தருணங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் சாதனைகள் புரிய வேண்டும். வாழ்க்கை என்பது வாய்ப்புகளின் அடிப்படையில் அமைவதல்ல, நாம் எடுக்கும் சரியான முடிவுகளின் (Choices) அடிப்படையில் அமைவது" என்று அவர் வலியுறுத்தினார்.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீ.ஆ. சண்முகம் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேசினார். மாணவர்கள் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, இலக்குகளை எட்ட வேண்டும் என்றும், அதன் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
விழாவின் இறுதியில் மாணவப் பொதுச் செயலாளர் ஜோ அமுதன் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை விரைந்து வழங்க ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:38:07 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

விடுமுறை நாட்களில் ஆதார் சேவை செயல்படும் : தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஏற்பாடு
வியாழன் 30, ஏப்ரல் 2026 11:51:36 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:50:57 AM (IST)

தூத்துக்குடியில்ஆவணங்கள் இருந்தும் நில அபகரிப்பு முயற்சி? நீதி கோரும் முதியவர் குடும்பத்தினர்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:30:15 AM (IST)









