» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி கல்லூரியில் நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:54:47 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் ஆனந்த விகடன் மற்றும் சென்னை கிங்மேக்கர்ஸ் அகாடமி சார்பில் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., என்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., என்ற கல்வி நிகழ்ச்சியை யு.பி.எஸ்.சி/டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் சென்னை கிங்மேக்கர்ஸ் அகாடமி இணைந்து கல்லூரி அரங்கில் நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு வ.உ.சி. கல்லூரிச் செயலர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி டாக்டர் ரவி, கிங்மேக்கர்ஸ் அகாடமியின் இயக்குநர் சத்ய ஸ்ரீ பூமிநாதன், பயிற்சியாளர் அடில் பெய்க் ஆகியோர் சிவில் சர்வீஸ் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் உத்திகளை மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்தனர். உதவிப் பேராசிரியர் டாக்டர்.ஜாக்சன் ஒருங்கிணைத்தார். தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி, சிவகாசி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் பயன்பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:40:40 PM (IST)

தூத்துக்குடி வங்கி ஏ.டி.எம். மெஷினில் கொள்ளை முயற்சி : இளைஞர் கைது
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:25:48 PM (IST)

ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:58:03 AM (IST)

சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கலை நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:52:10 AM (IST)

கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் சாவு : 2 பேர் படுகாயம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:42:58 AM (IST)

பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு: முகமூடி ஆசாமி கைவரிசை - போலீஸ் விசாரணை!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:25:06 AM (IST)








