» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு: முகமூடி ஆசாமி கைவரிசை - போலீஸ் விசாரணை!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:25:06 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே பெண்ணிடம் 5½ பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற முகமூடி ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
உடன்குடி மற்றும் மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாகப் பட்டப்பகலில் முகமூடி அணிந்து கொண்டு, தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து இந்தத் துணிகரச் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள செட்டிவிளை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சித்திரலேகா (55). இவர் நேற்று முன்தினம் மாலையில் வயல்வெளிக்குச் சென்று, மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனது மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
செட்டிவிளை பிரதான சாலையில் அவர் வந்து கொண்டிருந்தபோது, கருப்பு துணியால் முகத்தை மூடியவாறு, தலையில் தொப்பி அணிந்த மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளார். சித்திரலேகா சற்று விலகி நடக்க முயன்ற தருணத்தில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் சித்திரலேகாவின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சித்திரலேகா கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த முகமூடி கொள்ளையன் தனது மோட்டார் சைக்கிளை மின்னல் வேகத்தில் செலுத்தித் தப்பியோடிவிட்டான்.
இச்சம்பவம் குறித்துச் சித்திரலேகா அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் அடையாளங்களை வைத்துத் தப்பியோடிய கொள்ளையனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:40:40 PM (IST)

தூத்துக்குடி வங்கி ஏ.டி.எம். மெஷினில் கொள்ளை முயற்சி : இளைஞர் கைது
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:25:48 PM (IST)

வ.உ.சி கல்லூரியில் நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:54:47 AM (IST)

ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:58:03 AM (IST)

சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கலை நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:52:10 AM (IST)

கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் சாவு : 2 பேர் படுகாயம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:42:58 AM (IST)








