» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விஏஓ வீட்டிற்குள் நுழைந்து குழந்தையைக் கடத்த முயன்ற பெண் கைது!

திங்கள் 27, ஏப்ரல் 2026 9:00:20 AM (IST)

சாத்தான்குளத்தில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் உள்ளே புகுந்து, அவரது மனைவியைத் தாக்கி குழந்தையைக் கடத்த முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணைப் பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஓடக்கரை தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் அரசூர் 1-ஆம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று பிற்பகல் சுபாஷ் வீட்டில் இருந்தபோது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அவர் சுபாஷின் மனைவியின் கழுத்தை நெரித்து, அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சுபாஷின் மனைவி கூச்சலிடவே, அருகிலிருந்த உறவினர்கள் ஓடி வந்தனர். உறவினர்கள் வருவதைக் கண்ட அந்தப் பெண், தப்பிக்கும் முயற்சியில் அங்கிருந்த சுபாஷின் 3 வயது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓட முயன்றார். 

உடனே சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பெண்ணை மறித்து, குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். அப்போது அந்தப் பெண் தன்னைத் தடுக்க முயன்றவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்துப் பிடித்துச் சாத்தான்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட பெண் மீது புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தாமதம் செய்ததாகக் கூறி, சுபாஷின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதும், கடந்த ஒரு மாதமாக மேல சாத்தான்குளம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மாரியம்மாளைக் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory