» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் வாக்களிப்பு
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:48:07 AM (IST)

'இயேசு விடுவிக்கிறார்' ஊழிய நிறுவனத்தின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ், பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய வேட்பாளர்களும், பிரமுகர்களும் காலையிலேயே தங்களது வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர்.
திமுக வேட்பாளர் வாக்களிப்பு: ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் ராமஜெயம், குரும்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இயேசு விடுவிக்கிறார்' ஊழிய நிறுவனத்தின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ், பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
அம்மன்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், காலையிலிருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியவர்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் வாக்குப்பதிவு: விளாத்திகுளம் தொகுதி முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:31:00 PM (IST)

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை; தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:18:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம்: காலை 11 மணி நிலவரப்படி 35.16% வாக்குப்பதிவு; முதலிடத்தில் தூத்துக்குடி தொகுதி!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:53:58 AM (IST)

திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் : வாக்களித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:10:15 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:01:53 AM (IST)







